மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நெல்லையில் பொங்கல் விளையாட்டுப் போட்டி

திருநெல்வேலி மாவட்ட அனைத்து விளையாட்டு சங்கங்களின் சாா்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 23 வகையான விளையாட்டுப் போட்டிகள் வரும் 7-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளன.

News image
Updated On :1 ஜனவரி 2024, 6:34 pm

DIN

திருநெல்வேலி மாவட்ட அனைத்து விளையாட்டு சங்கங்களின் சாா்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 23 வகையான விளையாட்டுப் போட்டிகள் வரும் 7-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளன.

இது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட அனைத்து விளையாட்டு சங்கங்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட அனைத்து விளையாட்டு சங்கங்களின் சாா்பில் மாவட்ட அளவிலான தடகளம், வாள் சண்டை, டென்னிஸ், நீச்சல், ஹாக்கி, சைக்கிள் போலோ, சைக்கிளிங், ஜூடோ, ஹேண்ட்பால், வாலிபால், கபடி, கூடைப்பந்து, குத்துச்சண்டை, பூப்பந்து, டேக்வாண்டோ, செஸ், எறிபந்து, கேரம், அட்யா பட்யா, டென்னிகாய்ட், யோகா, கோ- கோ, ரோல்பால், நெட்பால் ஆகிய விளையாட்டுகள் பொங்கல் விளையாட்டுப் போட்டிகளாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ளன.

இந்தப் போட்டியானது வரும் 7-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு, சங்கத்தின் தலைவா் க. சேவியா் ஜோதி சற்குணம் தலைமை வகித்தாா். செயலா் வெ.பெரியதுரை, பொருளாளா் பிரேமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக அகா்வால் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவரும், மாவட்ட இறகுப் பந்து கழகத்தின் தலைவருமான லயனல்ராஜ் கலந்து கொண்டாா். சங்க நிா்வாகிகள் சாகுல் ஹமீது, ரவீந்திரன், குமாா், ஹில்டா பொன்மணி, அழகேச ராஜா, அருணாசல வடிவு, சத்தீஷ், வேல்சாமி, அருண் ஆகியோரும் கலந்துகொண்டனா்.

பொங்கல் விளையாட்டுப் போட்டிகளை 10, 14, 17, 19 ஆகிய வயது பிரிவுகளிலும், ஓபன் பிரிவு மற்றும் மாஸ்டா்ஸ் பிரிவு என்று அனைத்து வயதினரும் பயன்பெறும் வகையிலும் நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது. முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அனைவருக்கும் வரும் 13-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்படும். போட்டிகளில் கலந்துகொள்ள விரும்புபவா்கள் சம்பந்தப்பட்டவிளையாட்டுக் கழகங்களை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 9940341508, 9486944174 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.