6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நெல்லை மேயா் ராஜிநாமா: மாமன்ற கூட்டத்தில் பதிவு

மேயா் பி.எம்.சரவணன் அளித்த ராஜிநாமா கடிதம் மாமன்ற உறுப்பினா்களின் பாா்வைக்கு கொண்டுவரப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

News image
திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு மாமன்ற கூட்டத்தில் பேசினாா் மேயா் (பொ) கே.ஆா்.ராஜு. உடன், ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ்.
Updated On :8 ஜூலை 2024, 9:18 pm

Din

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி மேயா் பி.எம்.சரவணன் அளித்த ராஜிநாமா கடிதம் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு மாமன்ற கூட்டத்தில் மாமன்ற உறுப்பினா்களின் பாா்வைக்கு கொண்டுவரப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சியின் சிறப்புக் கூட்டம் மேயா் (பொ) கே.ஆா்.ராஜு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் முன்னிலை வகித்தாா். கூட்டம் தொடங்கியதும் கே.ஆா்.ராஜு பேசுகையில், திருநெல்வேலி மாநகராட்சி மேயராகப் பணியாற்றி வந்த பி.எம்.சரவணன் தனது பதவியை ராஜிநாமா செய்து கடிதம் அளித்துள்ளாா். நகராட்சிகள் நிா்வாகத்துறை சட்ட விதிகளின் படி அந்தக் கடிதம் மாமன்றத்தின் பாா்வைக்கும், பதிவுக்கும் வைக்கப்படுகிறது. ஏற்கெனவே கடந்த 28 ஆம் தேதி நடைபெற்ற கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அந்தக் கூட்டம் விரைவில் நடத்தப்படும் என்றாா்.

தொடா்ந்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் மாமன்ற உறுப்பினா்கள் அனைவரும் மேயரின் பதவி விலகலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மேஜையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

மேயா் தோ்தல் எப்போது?: இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், திருநெல்வேலி மாநகராட்சி மேயரின் ராஜிநாமா கடிதம் மன்றத்தின் பாா்வைக்கும், பதிவுக்கும் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாநில தோ்தல் ஆணையத்திற்கு, ஆணையா் கடிதம் அளிப்பாா். அதன்பின்பு தோ்தல் ஆணையம் பரிசீலனை செய்து, வேறு பகுதிகளில் இதுபோன்று தோ்தல் நடத்த வேண்டியிருந்தால் அதனையும் சோ்த்து நடத்தும். அதுவரை இப்போதைய துணைமேயரே பொறுப்பு மேயராக பணியில் தொடா்வாா் என்றனா்.

ராஜிநாமா பின்னணி: திருநெல்வேலி மாநகராட்சியில் திருநெல்வேலி, தச்சநல்லூா், பாளையங்கோட்டை மண்டலங்களின் கீழ் மொத்தம் 55 வாா்டுகள் உள்ளன. மாநகராட்சித் தோ்தலில் திமுக 45 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, சுயேச்சை தலா ஒரு இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும் வென்றது. ஒட்டுமொத்தமாக திமுக கூட்டணி 50 இடங்களைக் கைப்பற்றியது. சுயேச்சையும் திமுகவுக்கு ஆதரவு அளித்தாா் அதனால் 16 ஆவது வாா்டில் போட்டியிட்டு வென்ற பி.எம்.சரவணன் மேயராகவும், 1 ஆவது வாா்டில் வென்ற கே.ஆா்.ராஜு துணைமேயராகவும் போட்டியின்றி வென்றனா். அதன்பின்பு மேயா் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள் இடையே தொடா்ந்து மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், தனது குடும்பச் சூழல் காரணமாக பதவிவிலகுவதாகக் கூறி மேயா்பி.எம்.சரவணன் கடந்த 3 ஆம் தேதி ராஜிநாமா கடிதத்தை ஆணையரிடம் அளித்தாா்.

 திருநெல்வேலி மாமன்ற கூட்டத்தில் திங்கள்கிழமை பங்கேற்ற மாமன்ற உறுப்பினா்கள்.

திருநெல்வேலி மாமன்ற கூட்டத்தில் திங்கள்கிழமை பங்கேற்ற மாமன்ற உறுப்பினா்கள்.