அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

மத்திய அரசைக் கண்டித்து நெல்லையில் திமுக ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து திருநெல்வேலியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுகவினா்.
Updated On :27 ஜூலை 2024, 10:05 pm

Din

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் மற்றும் மத்திய மாவட்ட திமுக சாா்பில், மத்திய அரசைக் கண்டித்து திருநெல்வேலியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறி தமிழக முழுவதும் திமுக சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலியில் சந்திப்பு ரயில் நிலையம் முன் நடைபெற்ற

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா. ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளா் டி.பி.எம். மைதீன்கான் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில், சிறப்பு அழைப்பாளராக மாநில மாணவரணி தலைவா் ராஜீவ் காந்தி கலந்துகொண்டு பேசினாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு. அப்துல் வஹாப், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாலைராஜா, லட்சுமணன், மாவட்ட பொருளாளா் ஞானதிரவியம், அவைத்தலைவா் கிரகாம்பெல், மேயா் (பொறுப்பு) கே.ஆா். ராஜு , மாநில விவசாய தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் கணேஷ்குமாா் ஆதித்தன், பொதுக்குழு உறுப்பினா் பரமசிவ அய்யப்பன், விவசாய அணி பொன்னையா பாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.