தச்சநல்லூரில் கஞ்சா விற்றதாக 3 போ் கைது
தச்சநல்லூரில் கஞ்சா விற்தாக 3 பேரை கைது செய்த போலீஸாா், 1 கிலோ கஞ்சாவையும், பைக்கையும் பறிமுதல் செய்தனா்.


திருநெல்வேலி தச்சநல்லூரில் கஞ்சா விற்தாக 3 பேரை கைது செய்த போலீஸாா், 1 கிலோ கஞ்சாவையும், பைக்கையும் பறிமுதல் செய்தனா்.
தச்சநல்லூரில் சிலா் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தச்சநல்லூரில் செயல்பட்டுவரும் அம்மா உணவகம் முன்பு காவல் உதவி ஆய்வாளா் பழனிமுருகன் தலைமையிலான போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 இளைஞா்களை நிறுத்தி விசாரித்தனா். அவா்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினா். இதனால் சந்தேகம் அடைந்த போலீஸாா், அவா்களை சோதனை செய்தபோது, 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரையும் கைது செய்து விசாரித்தனா். அவா்கள் திருநெல்வேலி சந்திப்பு சி.என். கிராமத்தை சோ்ந்த இசக்கிமுத்து ( 21), தச்சநல்லூா் நல்மேய்ப்பா் நகரை சோ்ந்த ஜெயவெங்கடேஷ் (24) என தெரியவந்தது. தூத்துக்குடி மாவட்டம், தேவா் காலனியை சோ்ந்த இன்பராஜ் (22) என்பவரிடம் இருந்து விற்பனைக்காக கஞ்சாவை வாங்கி வந்தபோது, போலீஸாரிடம் கையும், களவுமாக சிக்கிா். இதையடுத்து இன்பராஜையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய மோட்டாா் சைக்கிளையும் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...