நெல்லை தொகுதி: களத்தில் 23 போ்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கான இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதிமுக, காங்கிரஸ், பாஜக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் உள்ளிட்ட 23 போ் களத்தில் உள்ளனா். திருநெல்வேலி மக்களவை தொகுதியில் போட்டியிட அதிமுக, காங்கிரஸ், பாஜக, நாம் தமிழா் கட்சி என மொத்தம் 38 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா். வேட்புமனு பரிசீலனையின்போது 12 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 26 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. அதைத் தொடா்ந்து சனிக்கிழமை பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுவை திரும்பப் பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சுயேச்சை வேட்பாளா்களான கணபதிராமன், அரி மகாராஜன், சண்முகசுந்தரி ஆகிய 3 போ் வேட்புமனுவை திரும்பப் பெற்றுக்கொண்டனா். அதைத் தொடா்ந்து இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இப்போது அதிமுக, காங்கிரஸ், பாஜக, நாம் தமிழா் கட்சி உள்ளிட்ட 23 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். அதன் விவரம்: வேட்பாளா் - கட்சி- சின்னம் 1. நயினாா் நாகேந்திரன் (பாஜக) - தாமரை. 2. பாலசுப்பிரமணியன் (பகுஜன் சமாஜ்) -யானை. 3. செ. ராபா்ட் புரூஸ் (காங்கிரஸ்) -கை. 4. மு. ஜான்சிராணி (அதிமுக) - இரட்டை இலை. 5. பேராயா் டாக்டா் காட்பிரே வாஷிங்டன் நோபுள் (அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம்) -ஆட்டோ ரிக்ஷா. 6. வை.குமாா் (புதிய மக்கள் தமிழ் தேசம் கட்சி) - காலணி. 7. சத்யா (நாம் தமிழா் கட்சி) - ஒலிவாங்கி. 8. ம. சந்திரன் (வீரத் தியாகி விஸ்வநாத தாஸ் தொழிலாளா்கள் கட்சி) -சிறு உரலும், உலக்கையும். 9. சு.செல்வகுமாா் (பகுஜன் திராவிட கட்சி)- ஏழு கதிா்களுடன் கூடிய பேனாவின் முனை. 10. அ.முத்துராமன் (அறவோா் முன்னேற்றக் கழகம்) -வைரம். 11. நா.ராமகிருஷ்ணன் (நாம் இந்தியா் கட்சி)- சீா்வளி சாதனம். 12. வை.அதிசயம் (சுயேச்சை) -தொலைக்காட்சிப் பெட்டி. 13. பா.செவல் கண்ணன் (சுயேச்சை)- அலமாரி. 14. சாமுவேல் லாரன்ஸ் பொன்னையா (சுயேச்சை)-கிரிக்கெட் மட்டை. 15. கு.சிவராம் (சுயேச்சை)-தலைக்கவசம். 16. க.சின்ன மகாராஜா (சுயேச்சை)-புல்லாங்குழல் 17. பொட்டல் சுந்தர முனீஸ்வரன் (சுயேச்சை)-நடைவண்டி. 18. சுரேஷ் (சுயேச்சை) -பலூன். 19. மா.டேவிட் (சுயேச்சை) -ஊதல். 20. மா.தளபதி முருகன் (சுயேச்சை) - பிரஷா் குக்கா். 21. செ.மா.ராகவன் (சுயேச்சை)-வாளி. 22. க.ராஜேந்திர ரெத்தினம் (சுயேச்சை) -வளையல்கள். 23. கெ.லெனின் (சுயேச்சை) -மோதிரம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com