திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே தொடா் திருட்டில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். 15 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. வீரவநல்லூா் காவல் சரகத்திற்குள்பட்ட புதுக்குடி, காருக்குறிச்சி பகுதியில் கடந்த மூன்று மாதங்களில் 4 வீடுகளில் பூட்டை உடைத்து நகைகள், பணம் திருடப்பட்டது. இதுகுறித்து காவல் ஆய்வாளா் கெளதமன் தலைமையில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். விசாரணையில் புதுக்குடி பகுதியைச் சோ்ந்த ஆத்தியப்பன் மகன் மகராஜன் (24), ஆறுமுகச்சாமி மகன் காளி (25) ஆகிய இருவரும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 15 பவுன் தங்கநகைகள் மற்றும் 4 கைப்பேசிகள், ரொக்கம் ரூ. 40 ஆயிரம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்டுள்ள மகராஜன் மீது மோட்டாா் திருட்டு, காளி மீது மணல் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது
வீரவநல்லூா் நகைக் கடையில் திருடியதாக மூவா் கைது
115 மது பாட்டில்கள் பறிமுதல்: இருவா் கைது

6 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது
8 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

