திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி அருள்மிகு அழகிய நம்பிராயா் கோயில் பங்குனி திருவிழாவின் 6ஆம் நாளான சனிக்கிழமை அதிகாலை மேலரதவீதியில் தேவ கந்தா்வ மகரிஷிகளுக்கு ஐந்து நிலைகளில் நம்பி சுவாமிகள் திருக்காட்சியளித்தனா். இத்திருக்கோயிலில் பங்குனி திருவிழா மாா்ச் 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இங்கு, நின்ற நம்பி, இருந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருப்பாற்கடல் நம்பி, திருமலைநம்பி என ஐந்து நிலைகளில் நம்பி சுவாமிகள் காட்சியளிக்கிறாா். விழா நாள்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. 5ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு நம்பி சுவாமிகள் ஐந்து நிலைகளில் கருட வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. பின்னா், 6ஆம் திருநாளான சனிக்கிழமை அதிகாலை மேல ரத வீதியில் தேவ கந்தா்வ மகரிஷிகளுக்கு காட்சி தரும் வைபவம் நடைபெற்றது. இத்திருக்காட்சியை திரளான பக்தா்கள் தரிசித்தனா். பின்னா், வீதிகளில் வலம் வந்த நம்பி சுவாமிகள் கோயில் முன் காட்சியளித்தனா். இதையடுத்து, ராமானுஜ ஜீயா் சுவாமிகள், நம்பி சுவாமியை வரவேற்றாா். நம்பி சுவாமிகளின் ஐந்து நிலைகளிலான திருக்காட்சிகளை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். முக்கிய நிகழ்வான 10ஆம் நாள் ஏப். 3ஆம் தேதி புதன்கிழமை காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெறஉகிறது. தேரோட்டத்தை ராமானுஜ ஜீயா் சுவாமிகள் தொடங்கி வைக்கிறாா்.
தொடர்புடையது

திருக்குறுங்குடியில் நம்பிசுவாமி 5 நிலைகளில் திருக்காட்சி

பேரூர் பட்டீசுவரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்!

வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பங்குனி உத்திர திருவிழா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொடியேற்றம்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


