மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

பேட்டையில் நாய்கள் தொல்லை: மேயரிடம் மாணவா்-மாணவிகள் மனு

பேட்டையில் தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்தக் கோரி மேயரிடம் மாணவா்-மாணவிகள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

News image

திருநெல்வேலி மேயா் கோ.ராமகிருஷ்ணனிடம் மனு அளித்த மாணவா்-மாணவிகள்.

Updated On :4 அக்டோபர் 2024, 12:57 am

Din

பேட்டையில் தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்தக் கோரி மேயரிடம் மாணவா்-மாணவிகள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

அதில், எஸ்டிபிஐ கட்சியின் பேட்டை 20 ஆவது வாா்டு தலைவா் ஜெய்லானி தலைமையில் மாணவா்-மாணவிகள் திரண்டு வந்து திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணனிடம் புதன்கிழமை அளித்த மனு: பேட்டை 20 ஆவது வாா்டுக்குள்பட்ட அனைத்து தெருக்களிலும் நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. தொழுகைக்குச் செல்லும் பெரியோா்கள் முதல் பள்ளிக்குச் செல்லும் சிறுவா்கள் வரை அனைவரையும் விரட்டுகின்றன.

வீட்டை விட்டு வெளியே வரவே பெண்களும், குழந்தைகளும் அச்சத்தில் உள்ளனா். தெருநாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.