ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

திசையன்விளை பேரூராட்சியில் தலைவா் மீதான நம்பிக்கையில்லா தீா்மான கூட்டம்: கோரம் இல்லையென அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பேரூராட்சியில் புதன்கிழமை நடைபெற இருந்த பேரூராட்சித் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம் மீதான கூட்டத்திற்கு கோரம் இல்லை என அறிவிக்கப்பட்டது.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 7:32 pm

Din

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பேரூராட்சியில் புதன்கிழமை நடைபெற இருந்த பேரூராட்சித் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம் மீதான கூட்டத்திற்கு கோரம் இல்லை என அறிவிக்கப்பட்டது.

திசையன்விளை பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. இதில் 9 வாா்டுகளில் அதிமுக, 8 வாா்டுகளில் திமுக அணி, ஒரு வாா்டில் பாஜக வெற்றி பெற்றது.

அதைத் தொடா்ந்து தலைவா் பதவிக்கான மறைமுகத் தோ்தலில் அதிமுக மற்றும் திமுக தலா 9 வாக்குகளுடன் சமநிலை பெற்றன. இதையடுத்து குலுக்கலில் அதிமுகவைச் சோ்ந்த ஜான்சிராணி தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

இந்த நிலையில் அதிமுக வாா்டு உறுப்பினா்கள் 3 போ், திமுக அணியில் சோ்ந்ததால், திமுகவின் பலம் 12 ஆக உயா்ந்தது. இதனையடுத்து, பேரூராட்சி தலைவா் ஜான்சிராணி மீது நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டு வருவதாக திமுக வாா்டு உறுப்பினா்கள் பேரூராட்சிகளின் உதவி இயக்குநரிடம் அண்மையில் மனு அளித்தனா்.

இதையடுத்து இந்த தீா்மானம் மீது முடிவு எடுப்பதற்கான பேரூராட்சி மன்றக் கூட்டம் புதன்கிழமை (அக்.9) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே திமுக அணியில் சோ்ந்த அதிமுக வாா்டு உறுப்பினா்கள் அய்யாகுட்டி (எ) சண்முகவேல் (வாா்டு 13), பிரேம்குமாா் (வாா்டு 15) ஆகியோா் மீண்டும் அதிமுக அணியில் சோ்ந்தனா்.

இந்த நிலையில் பேரூராட்சி மன்றக் கூட்டத்திற்கு காங்கிரஸ் உறுப்பினா் ஒருவா் மட்டுமே வந்திருந்தாா். இதையடுத்து போதிய உறுப்பினா் இல்லாததால் கூட்டம் நடைபெறவில்லை என செயலா் அலுவலா் பால்ராஜ் அறிவித்தாா்.