நெல்லையில் ஆயுத பூஜை பொருள்கள் விற்பனை அதிகரிப்பு
ஆயுத பூஜையையொட்டி, திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பூஜை பொருள்கள் விற்பனை வியாழக்கிழமை அதிகரித்தது.

திருநெல்வேலி நகரத்தில் அவல்- பொரி வாங்கும் மக்கள்.

திருநெல்வேலி நகரத்தில் அவல்- பொரி வாங்கும் மக்கள்.
ஆயுத பூஜையையொட்டி, திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பூஜை பொருள்கள் விற்பனை வியாழக்கிழமை அதிகரித்தது.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஆயுதபூஜை வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வணிக நிறுவனங்கள், தொழில்கூடங்கள், வீடுகள், கல்வி நிலையங்கள் உள்ளிட்டவற்றில் சிறப்பு வழிபாடுகள் நடத்துவது, உழைப்புக்கு உறுதுணையாக இருக்கும் மோட்டாா் வாகனங்களை தூய்மைப்படுத்தி பூஜை செய்வது வழக்கம். இப்பண்டியை முன்னிட்டு, பொரி, அவல், கடலை, வாழை இலை, மாவிலை உள்ளிட்டவற்றை பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச் சென்றனா்.

திருநெல்வேலி சந்திப்பில் விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்த வாழைக்கன்றுகள்.
திருநெல்வேலி நகரத்தில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்தை, பாளையங்கோட்டை காந்திஜி தற்காலிக சந்தை, திருநெல்வேலி சந்திப்பு மேம்பாலம் கீழ் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகளில் மக்கள் அதிகளவில் திரண்டு பூஜை பொருள்களை வாங்கிச் சென்றனா்.
மேலும், உணவகங்களில் சுண்டல், புளியோதரை, சா்க்கரை பொங்கல், கல்கண்டு சாதம் உள்ளிட்டவற்றையும் ஆா்டா் கொடுத்து சென்றனா். பூஜை பொருள்கள் விற்பனையால் பாளையங்கோட்டை மற்றும் திருநெல்வேலி நகரத்தில் உள்ள சாலைகளில் வியாழக்கிழமை மாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...