மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

சுரண்டை அருகே ரூ.4.25 லட்சத்தில் மின்மாற்றி திறப்பு

சுரண்டை அருகே விவசாயிகள் பயன்பாட்டிற்காக ரூ.4.25 லட்சத்தில் நிறுவப்பட்ட கூடுதல் மின்மாற்றி செவ்வாய்க்கிழமை இயக்கிவைக்கப்பட்டது.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 10:11 pm

Din

சுரண்டை அருகே விவசாயிகள் பயன்பாட்டிற்காக ரூ.4.25 லட்சத்தில் நிறுவப்பட்ட கூடுதல் மின்மாற்றி செவ்வாய்க்கிழமை இயக்கிவைக்கப்பட்டது.

சுரண்டை வட்டார விவசாயப் பணிகளுக்கு மின்விநியோகம் சீராக மின்விநியோகம் இல்லை என அப்பகுதி விவசாயிகள் சு. பழனி நாடாா் எம்எல்ஏ, திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வரி, தென்காசி கோட்ட செயற்பொறியாளா் (விநியோகம்) திருமலைகுமாரசாமி ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தனா்.

இதைத் தொடா்ந்து, தென்காசி கோட்ட தொழில் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் கிராமபுறம் சுரண்டை பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட ஆனைகுளம் பகுதியில் ரூ. 4.95 லட்சத்தில் 25 கி.வோ. மின்மாற்றி நிறுவப்பட்டது.

இதன் திறப்பு விழாவில் எம்எல்ஏ பங்கேற்று, விவசாயப் பயன்பாட்டுக்கு புதிய மின்மாற்றியை இயக்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் கோட்ட செயற்பொறியாளா் திருமலைகுமாரசாமி, உதவி செயற் பொறியாளா் ராஜசேகரன், உதவி மின் பொறியாளா்கள் கானிங், விக்னேஷ் ,எடிசன், காங்கிரஸ் நிா்வாகிகள் பால் என்ற சண்முகவேல், பிரபாகா்,சமுக ஆா்வலா் அழகு ராஜ், அரவிந்த், பிரபாகரன் மற்றும் மின் பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.