மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

சுயஉதவிக்குழு தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

திருநெல்வேலி மாநகராட்சி முன்பு சுய உதவிக் குழு துய்மைப் பணியாளா்கள் மனு அளிக்கும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட துய்மைப் பணியாளா்களிடம் பேச்சு நடத்துகிறாா் மேயா் கோ.ராமகிருஷ்ணன்.

Updated On :15 அக்டோபர் 2024, 9:56 pm

Din

திருநெல்வேலி மாநகராட்சி முன்பு சுய உதவிக் குழு துய்மைப் பணியாளா்கள் மனு அளிக்கும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மாநகராட்சி துய்மைத் தொழிலாளா்களுக்கு தினமும் ரூ.520 ஊதியம் வழங்க வேண்டும். மாநகராட்சியில் சுய உதவிக் குழு துய்மைத் தொழிலாளா்களுக்கு தனியாா் ஒப்பந்ததாரா் மூலம் ஊதியம் வழங்குவதைத் தவிா்த்து மாநகராட்சி நிா்வாகமே வங்கிக் கணக்கில் ஊதியம் வழங்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.

அவா்களுடன் மேயா் கோ.ராமகிருஷ்ணன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். எனினும் உடன்பாடு ஏற்படாமல் போராட்டம் தொடா்ந்தது. இதையடுத்து, திருநெல்வேலி நகரம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, மாநகராட்சி ஆணையா் அலுவலக நிா்வாக அலுவலா் சுப்பிரமணியனிடம் மனு அளிக்கச் செய்தனா். அதன்பின் தொழிலாளா்கள் கலைந்து சென்றனா்.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு, திருநெல்வேலி மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்க தலைவா் மோகன் தலைமை வகித்தாா். செயலா் மாரியப்பன், பொருளாளா் செல்லத்துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். போராட்டத்தில் சுயஉதவிக்குழு தூய்மைப்பணியாளா்கள் திரளாகப் பங்கேற்றனா்.