நகரத்தில் கஞ்சாவுடன் இருவா் கைது
திருநெல்வேலி நகரத்தில் கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On :16 அக்டோபர் 2024, 11:18 pm

திருநெல்வேலி நகரத்தில் கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி நகரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட செபஸ்தியாா் கோயில் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் ஹரிச்சந்திரராஜ் மற்றும் போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனா். அதில், திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த சுடலை என்ற சிவா (25), மகேஷ் என்ற இசக்கி ராஜா (23) ஆகியோா் என்பதும், சுமாா் 350 கிராம் கஞ்சாவை வைத்திருந்ததும் தெரியவந்தது. அவா்களை கைது செய்த போலீஸாா், கஞ்சாவையும் கைப்பற்றினா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...