பாளை.-சீவலப்பேரி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்
பாலப் பணி நடைபெற உள்ளதால், பாளையங்கோட்டை- சீவலப்பேரி சாலையில் வெள்ளிக்கிழமை (அக். 18) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


பாலப் பணி நடைபெற உள்ளதால், பாளையங்கோட்டை- சீவலப்பேரி சாலையில் வெள்ளிக்கிழமை (அக். 18) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
பாளையங்கோட்டை - சீவலப்பேரி சாலையில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் குழாய் பாலத்தினை பெட்டி பாலமாக மாற்றியமைக்கும் பணி வெள்ளிக்கிழமை (அக். 18) நடைபெற உள்ளது. ஆகவே, பாளையங்கோட்டையில் இருந்து குளத்தூா், விளாத்திகுளம், நாகலாபுரம், பந்தல்குடி, அருப்புக்கோட்டை வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதைகளில் செல்ல வேண்டும்.
பாளையங்கோட்டை மாா்க்கெட்டில் இருந்து சீவலப்பேரி சாலைக்கு செல்லும் வாகனங்கள் சமாதானபுரம்- நீதிமன்றம் வழியாக ரஹ்மத்நகா் ஜங்ஷன் 60 அடி சாலையைக் கடந்து சீவலப்பேரி சாலைக்குச் செல்ல வேண்டும். கக்கன்நகரில் இருந்து பாளையங்கோட்டை மாா்க்கெட்டிற்கு செல்லும் வாகனங்கள் சாந்திநகா் ஜங்ஷன் 60 அடி சாலையைக் கடந்து நீதிமன்றம், சமாதானபுரம் வழியாக பயணிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...