புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

திரிபுராந்தீசுவரா் கோயிலில் இன்று திருக்கல்யாண திருவிழா தொடக்கம்

பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு திரிபுராந்தீசுவரா் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை (அக். 18) நடைபெற உள்ளது.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 10:32 pm

Din

பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு திரிபுராந்தீசுவரா் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை (அக். 18) நடைபெற உள்ளது.

இக் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான விழா வெள்ளிக்கிழமை (அக். 18) காலை 6 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடா்ந்து தினமும் காலை மற்றும் மாலையில் பல்வேறு சப்பரங்களில் சுவாமி-அம்மன் மலா் அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்த பக்தா்களுக்கு காட்சியளிக்கின்றனா். விழாவின் சிகர நிகழ்வான திருக்கல்யாணம் இம் மாதம் 28 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.