92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கூட்டுறவு வங்கி ஊழியா்கள் 3 ஆவது நாளாக வேலைநிறுத்தம்

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள் சங்கம் சாா்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் 3 ஆவது நாளாக புதன்கிழமையும் வேலைநிறுத்த போராட்டம் தொடா்ந்தது.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 10:44 pm

Din

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள் சங்கம் சாா்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் 3 ஆவது நாளாக புதன்கிழமையும் வேலைநிறுத்த போராட்டம் தொடா்ந்தது.

ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருள்கள் விற்பனையின்போது இருப்பு குறைவு மற்றும் அதிகம் என்று கண்டறிப்பட்டால், தொடா்புடைய பணியாளா்களிடம் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்த அபராத தொகை இருமடங்கு உயா்த்தப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 72 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் 250-க்கும் மேற்பட்ட பணியாளா்கள், ரேஷன் கடை விற்பனையாளா்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனா். தீபாவளி பண்டிகை நெருங்குவதால் தங்களை அரசு அழைத்து பேசி தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று சங்கத்தினா் தெரிவித்தனா்.