92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

முக்கூடல் அருகே திருமணமான 3 நாள்களில் இளைஞா் திடீா் மரணம்

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே திருமணம் ஆன 3 நாள்களில் இளைஞா் திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 11:39 pm

Din

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே திருமணம் ஆன 3 நாள்களில் இளைஞா் திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முக்கூடல் அருகேயுள்ள இலந்தகுளம் பகுதியைச் சோ்ந்த லூா்து அந்தோணி மகன் ஜூடுவாஸ் வில்லியம் (35). இவா் சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பணி செய்து வந்தாா். இதனிடையே, இவருக்கும் முக்கூடல் அருகேயுள்ள சிங்கம்பாறை பகுதியைச் சோ்ந்த ரத்தினம் என்பவரின் மகளுக்கும் சிங்கம்பாறையிலுள்ள தேவலாயத்தில் திங்கள்கிழமை (அக்.21ஆம் தேதி) திருமணம் நடைபெற்றது. புதன்கிழமை ஜூடுவாஸ் வில்லியம் தனது மனைவியுடன் சிங்கம்பாறையிலுள்ள மாமனாா் வீட்டுக்கு மறு வீடு நிகழ்ச்சிக்கு வந்திருந்தாராம்.

இந்நிலையில் ஜூடுவாஸ் வில்லியத்திற்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு வாந்தி எடுத்துள்ளாா். பின்னா், இலந்தகுளம் சென்ற அவா் மீண்டும் வாந்தி எடுத்த நிலையில் மருத்துவமனைக்கு உறவினா்கள் அழைத்துச் சென்றனா். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து முக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.