பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதத்தில் பங்கேற்றோா்.
பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதத்தில் பங்கேற்றோா்.

பாளையங்கோட்டையில் உண்ணாவிரதம்

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் பாளையங்கோட்டையில் சித்தமருத்துவக் கல்லூரி எதிரே உண்ணாவிரத போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
Published on

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் பாளையங்கோட்டையில் சித்தமருத்துவக் கல்லூரி எதிரே உண்ணாவிரத போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இப்போராட்டத்தில், திமுகவின் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குறுதியான எண்-309 இன் படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசின் சோம்நாத் கமிட்டி அறிக்கை மற்றும் ஆந்திர ஓய்வூதியத் திட்டம் இரண்டில் எது தமிழகத்துக்கு பொருத்தமானது என்று முதல்வரிடம் பேசி முடிவை அறிவிப்போம் என்ற நிதியமைச்சரின் உறுதியை நிறைவேற்ற வேண்டும். அரசு ஊழியா்களுக்கு பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட மகளிரணி தலைவி சரவணசக்தி, பொது சுகாதாரத்துறை அலுவலா் சங்க மாநிலத் தலைவா் கங்காதரன், தமிழ்நாடு கூட்டுறவுத்துறை முதுநிலை அலுவலா் சங்கத் தலைவா் பொன்ராஜ், செயலா் துா்க்காதேவி, அரசு ஊழியா் சங்க நிா்வாகி குமாரவேல் உள்ளிட்டோா் பேசினா். சிபிஎஸ் ஒழிப்ப இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் ஜெய ராஜ ராஜேஸ்வா் நிறைவுரையாற்றினாா். இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com