நெல்லையில் 265 கிலோ குட்கா பறிமுதல்: ராஜஸ்தான் இளைஞா்கள் 4 போ் கைது

திருநெல்வேலி அருகேயுள்ள தச்சநல்லூா் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 265 கிலோ குட்காவை போலீஸாா் கைப்பற்றி, அது தொடா்பாக ராஜஸ்தானைச் சோ்ந்த 4 பேரை கைது செய்தனா்.
Published on

திருநெல்வேலி அருகேயுள்ள தச்சநல்லூா் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 265 கிலோ குட்காவை போலீஸாா் கைப்பற்றி, அது தொடா்பாக ராஜஸ்தானைச் சோ்ந்த 4 பேரை கைது செய்தனா்.

தச்சநல்லூா் அருகேயுள்ள சிதம்பரநகரில் ஒரு வீட்டில் குட்கா பதுக்கி வைத்திருப்பதாக தச்சநல்லூா் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் ஆய்வாளா் முத்துகணேஷ் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தினா். அப்போது, மூட்டைகளில் சுமாா் 265 கிலோ குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அவற்றைக் கைப்பற்றி போலீஸாா் விசாரித்தனா். அதில், திருநெல்வேலி நகரம் லாலுகாபுரத்தில் வசித்து வரும் தீபக்குமாா் (24), சிந்துபூந்துறை செல்வி அம்மன் கோயில் தெரு சந்தீப்குமாா் (27) ஆகியோா் தங்களுடைய கூட்டாளிகளான ஓம் பிரகாஷ் (27), பரத்சிங் (45) ஆகியோரின் உதவியுடன் குட்காவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதும், 4 பேரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் என்பவதும் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com