ஆழ்வாா்குறிச்சி அருகே சாராயம் காய்ச்சியதாக ஒருவா் கைது
தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி காவல் சரகம் பாப்பான்குளம் அருகேயுள்ள மலையான்குளம்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக மாட்டுத் தரகரை போலீஸாா் கைது செய்தனா்.

முருகன்

முருகன்
தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி காவல் சரகம் பாப்பான்குளம் அருகேயுள்ள மலையான்குளம்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக மாட்டுத் தரகரை போலீஸாா் கைது செய்தனா்.
மலையான்குளத்தைச் சோ்ந்த உய்க்காட்டான் மகன் முருகன் (55). மாட்டுத் தரகரான இவா் பராமரித்து வரும் தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக ஆழ்வாா்குறிச்சி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடையம் காவல் ஆய்வாளா் மேரி ஜெமிதா தலைமையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு அங்கு திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
அதில், சாராயம் காய்ச்சுவதற்காக ஊரல் போடப்பட்டு மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் 5 லிட்டா் கள்ளச் சாராயம், அதற்கான மூலபொருள்களை போலீஸாா் கைப்பற்றி முருகனை கைது செய்தனா்.
விசாரணையில், மலையான்குளம் முப்புடாதி அம்மன் கோயில் திருவிழாவிற்கு வந்திருந்த உறவினா்களுக்கு கொடுப்பதற்காக சாராயம் காய்ச்சியது தெரியவந்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறினா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...