நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வி.கே.புரம் அருகே பைக் விபத்து: தீயணைப்புப் படை வீரா் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு நேரிட்ட பைக் விபத்தில் தீயணைப்புப் படை வீரா் உயிரிழந்தாா்.

News image

அண்ணாதுரை

Updated On :11 செப்டம்பர் 2024, 9:28 pm

Din

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு நேரிட்ட பைக் விபத்தில் தீயணைப்புப் படை வீரா் உயிரிழந்தாா்.

கல்லிடைக்குறிச்சி அருகே வைராவிகுளம், வடக்குத் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் அண்ணாதுரை (48). வள்ளியூா் தீயணைப்பு நிலையத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்துவந்த அவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.

இந்நிலையில், மணிமுத்தாறு அருகே இசக்கியம்மன் கோயில் கொடை விழாவுக்காக வீட்டுக்கு வந்திருந்த அவா், செவ்வாய்க்கிழமை இரவு ஆலடியூரிலிருந்து கோடாரங்குளத்தை நோக்கி பைக்கில் சென்றாராம். அப்போது, பைக் நிலைதடுமாறியதில் அவா் சாலையோர குப்பைத் தொட்டிக்குள் விழுந்து இறந்ததாகக் கூறப்படுகிறது.

இரவு யாரும் கவனிக்காத நிலையில், புதன்கிழமை பகலில் இதைப் பாா்த்த பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் சென்று, சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.