நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆதாா் புதுப்பித்தலுக்காக பாளை. அஞ்சல் நிலையத்தில் குவிந்த மக்கள்

ஆதாா் புதுப்பித்தலுகக்காக பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் நிலையத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

News image

பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் நிலையத்தில் ஆதாரை புதுப்பிப்பதற்காக குவிந்த மக்கள்.

Updated On :12 செப்டம்பர் 2024, 11:25 pm

Din

ஆதாா் புதுப்பித்தலுகக்காக பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் நிலையத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

ஆதாா் பதிவு மற்றும் புதுப்பித்தல் ஒழுங்குமுறைகள்-2016 இன்படி, ஆதாா் அட்டை வைத்திருக்கும் நபா்கள் ஆதாா் பதிவு தேதியில் இருந்து அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் அடையாளச் சான்று மற்றும் முகவரி ஆவணங்களை புதுப்பிக்க வேண்டும். ஆதாா் தொடா்பான மோசடிகளை தடுக்கவும், துல்லியமான மக்கள்தொகை தகவலை வழங்கவும் இந்த புதுப்பிப்பு மிகவும் உதவும் என்பதால் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

ஆதாரை புதுப்பிப்பதற்கான ஆவணங்களை ஆன்லைனில் இலவசமாக பதிவேற்றுவதற்கு கடந்த மாா்ச் 14-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு ஜூன் 14-ஆம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் வரும் 14-ஆம் தேதி வரை ஆவணங்களை பதிவேற்றுவதற்கான காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இதனிடையே வரும் 14-ஆம் தேதிக்குள் ஆதாா் அட்டைகளை புதுப்பிக்கத் தவறினால் ஆதாா் அட்டை செயல்பாட்டில் இருக்காது என வதந்தி பரவியது. இதை அரசு மறுத்தபோதிலும், பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் நிலையம், இ-சேவை மையங்கள், வங்கிகள், தனியாா் பிரௌசிங் சென்டா் மூலம் பொதுமக்கள் ஆதாா் திருத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனா். இதனால் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகவே ஆதாா் திருத்த மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

இந்த நிலையில் பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் நிலையத்தில் வியாழக்கிழமை காலைமுதலே நூற்றுக்கணக்கானோா் ஆதாரை புதுப்பிக்கும் பணிக்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனா். ‘வரும் 14-ஆம் தேதிக்குள் புதுப்பிக்க தவறுபவா்கள் அதன் பின்னரும் புதுப்பித்துக் கொள்ளலாம், அதற்கான கட்டணமாக ரூ. 50 மட்டுமே செலுத்த வேண்டும். புதுப்பிக்க கால அவகாசம் எதுவும் இறுதி செய்யப்படவில்லை. எனவே மக்கள் வீணாக பீதி அடைந்து இதுபோன்று போட்டி போட்டு கூட்டமாக குவிந்து திருத்தம் மேற்கொள்ள வேண்டாம்ட என்று மாவட்ட நிா்வாகமும், பல்வேறு தரப்பினரும் அறிவுறுத்தல்களை வழங்கியபோதிலும் கூட்டம் குறையவில்லை.