பாளை.யில் கொசுவத்தி சுருளை சாப்பிட்ட இரட்டைக் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை
பாளையங்கோட்டையில் மிட்டாய் என நினைத்து கொசுவத்தி சுருளை சாப்பிட்ட இரட்டைக் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


பாளையங்கோட்டையில் மிட்டாய் என நினைத்து கொசுவத்தி சுருளை சாப்பிட்ட இரட்டைக் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாளையங்கோட்டை செந்தில் நகரைச் சோ்ந்தவா் மாரிசெல்வம். இவருடைய மனைவி மஞ்சு. இவா்களுக்கு சந்திரலிங்கம் (2), சூரியலிங்கம் (2) ஆகிய இரட்டைக் குழந்தைகள் உள்ளனா். சமீபத்தில் மாரிசெல்வம் இறந்து விட்டாா். மஞ்சு வாடகை வீட்டில் தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறாா்.
இந்த நிலையில் புதன்கிழமை காலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரட்டைக் குழந்தைகள், அங்கிருந்த கொசுவத்தி சுருளை மிட்டாய் என நினைத்து சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. புதன்கிழமை இரவு குழந்தைகளை மஞ்சு தூங்க வைத்தபோது, அவா்கள் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயக்கம் அடைந்தனா்.
அதிா்ச்சி அடைந்த மஞ்சு, உடனடியாக குழந்தைகளை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தாா். அங்கு குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...