காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அம்பை பகுதியில் சாலை சீரமைப்புப் பணிகள்: கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு

அம்பாசமுத்திரம் பகுதியில் நடைபெற்றுவரும் சீரமைப்புப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு செய்தாா்.

News image

ஆலங்குளம் சாலையில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தில் ஆய்வு மேற்கொண்ட கண்காணிப்புப் பொறியாளா் டி. ஜெயராணி.

Updated On :12 செப்டம்பர் 2024, 11:30 pm

Din

அம்பாசமுத்திரம் பகுதியில் நடைபெற்றுவரும் சீரமைப்புப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு செய்தாா்.

நெடுஞ்சாலைத் துறை, அம்பாசமுத்திரம் கட்டுமானம் - பராமரிப்பு உள்கோட்டத்துக்குள்பட்ட அம்பாசமுத்திரம் - ஆலங்குளம் சாலை, அம்பாசமுத்திரம் - பாபநாசம்-மேலணைச் சாலை, ஆம்பூா் - பாபநாசம் சாலைகளில் தடுப்புச் சுவா் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை திருநெல்வேலி நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம்-பராமரிப்புக் கண்காணிப்புப் பொறியாளா் டி. ஜெயராணி ஆய்வு செய்தாா்.

உதவிக் கோட்டப் பொறியாளா் எஸ். ராஜேஸ்வரி, உதவிப் பொறியாளா் டி. விஷ்ணுவா்தன் ஆகியோா் உடனிருந்தனா்.