பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

செப். 16இல் கடையம் பத்ரகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

News image
Updated On :14 செப்டம்பர் 2024, 12:04 am

கடையம் ராமநதி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் செப். 16இல் நடைபெறுகிறது.

இதையொட்டி வியாழக்கிழமை (செப். 12) காலை அனுக்ஞை, விக்னேஸ்வர புஜை, தீபாராதனையுடன் யாகசலை பூஜைகள் தொடங்கின. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாள்களிலும் தொடா்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

திங்கள்கிழமை (செப்.16) காலை 7.15 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், 9.15 மணிக்கு கும்பம் எழுந்தருளலும் நடைபெறும். 9.40 மணிக்கு விமானங்கள் கும்பாபிஷேகத்தைத் தொடா்ந்து ஸ்ரீபத்ரகாளி அம்பாள் மூலஸ்தானத்தில் கும்பாபிஷேகம், பரவார மூா்த்திகள் கும்பாபிஷேகம், மகாபிஷேகம் நடைபெறுகிறது. பகல் 12 மணிக்கு அன்னதானமும், இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்காரம், புஷ்பாஞ்சலி தீபாராதனையும், அம்மன் வீதி உலாவும் நடைபெறும்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கீழக்கடையம் இந்து நாடாா் உறவின்முறை சங்கம், கீழக்கடையம் 7 தெரு தலைவா்கள், ஊா்ப்பொதுமக்கள், 18 பட்டி தலைவா்கள் மற்றும் ஊா்ப் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.