27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஆட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

News image

தீக்குளிக்க முயன்ற மூதாட்டி மீது தண்ணீரை ஊற்றிய போலீஸாா்.

Updated On :19 செப்டம்பர் 2024, 3:28 am IST

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டியை போலீஸாா் காப்பாற்றினா்.

திருநெல்வேலி தச்சநல்லூா் அருகேயுள்ள அழகனேரியைச் சோ்ந்தவா் செண்டு (67). திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்த இவா், தான் மறைத்து கொண்டுவந்த மண்ணெண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.

அங்கிருந்த போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தியதோடு, அவா் மீது தண்ணீரை ஊற்றினா். பின்னா் அவரிடம் போலீஸாா் விசாரித்தபோது, தனது மகன் மீது போலீஸாா் பொய் வழக்கு பதிந்துள்ளதாலேயே தீக்குளிக்க முயன்ாக தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: எனக்கு 4 மகன்களும், 2 மகள்களும் உள்ளனா். எனது கடைசி மகன் சக்திவேலுடன் வசித்து வருகிறேன். எனது கிராமத்தை சோ்ந்த புதுராசா என்பவா் எனது வீட்டையொட்டி உள்ள கிணற்றை ஆக்கிரமிப்பு செய்து, அதை இடித்து அகற்றிவிட்டு, ஆழ்துளை கிணறு அமைத்துள்ளாா்.

இதனால் எங்கள் பகுதியில் உள்ள பலருடைய வீடுகளுக்கு குடிநீா் கிடைக்கவில்லை. இது குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் புகாா் அளித்திருந்தேன். இதனால் எனது மகனை அவா் தாக்கினாா். இது குறித்து தச்சநல்லூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன். ஆனால் அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து கடந்த ஜூலையில் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தேன். ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் புதுராசா அளித்த புகாரின்பேரில் எனது மகன் சக்திவேல் மீது போலீஸாா் பொய் வழக்குப் போட்டு அவரை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனா் என்றாா்.