ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

நாலுமுக்கு, ஊத்து பகுதிகளில் மனித உரிமை ஆணையம் விசாரணை

திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, ஊத்து பகுதிகளில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் நிலை குறித்து மனித உரிமை ஆணையத்தினா் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.

News image
நாலுமுக்கு பகுதியில் தொழிலாளா்களிடம் விசாரணை நடத்திய மனித உரிமை ஆணையத்தினா்.
Updated On :19 செப்டம்பர் 2024, 10:57 pm

Din

திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, ஊத்து பகுதிகளில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் நிலை குறித்து மனித உரிமை ஆணையத்தினா் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.

மாஞ்சோலை தோட்டத் தொழிலாளா்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டதையடுத்து, அவா்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா்- தலைவா் டாக்டா் க. கிருஷ்ணசாமி மனித உரிமை ஆணையத்திடம் புகாரளித்திருந்தாா். அதன்பேரில், மனித உரிமை ஆணையம் சாா்பில் ரவிசிங், யோகேந்திர குமாா் திரிபாதி ஆகியோா் அடங்கிய குழுவினா் மாஞ்சோலை பகுதியில் தொழிலாளா்களிடம் புதன்கிழமை விசாரணையைத் தொடங்கினா்.

இரண்டாவது நாளான வியாழக்கிழமை நாலுமுக்கு, ஊத்து பகுதிகளில் தங்கியுள்ள தொழிலாளா்களிடம் விசாரணை நடத்தினா். தொழிலாளா்களின் குடியிருப்புக்கு மனித உரிமை ஆணையத்தினா் நடந்து சென்று வீடுகளில் அமா்ந்து அவா்களது கருத்துகளைப் பதிவுசெய்தனா்.

மனித உரிமை ஆணையக் குழுவினரிடம், தோட்ட நிா்வாகம் தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவில்லை; அரசு சாா்பில் வீட்டுமனைப் பட்டா, இலவச வீடு, இழப்பீடு வழங்க வேண்டும் என்று தொழிலாளா்கள் தெரிவித்தனா்.

இக்குழுவினா் காலையிலிருந்து இரவு வரை தொடா்ந்து ஒவ்வொரு வீடாகச் சென்று விசாரணையில் ஈடுபட்டனா்.