நாரணம்மாள்புரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தாழையூத்து அருகேயுள்ள நாரணம்மாள்புரத்தில் ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.
Published on

தாழையூத்து அருகேயுள்ள நாரணம்மாள்புரத்தில் ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

நாரணம்மாள்புரத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடங்களில் சிலா் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருப்பதாக புகாா்கள் வந்தன. இதையடுத்து அவற்றை கடந்த 12 ஆம் தேதி இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அங்கு குடியிருந்தவா்கள் காலஅவகாசம் கோரினா்.

இதையடுத்து புதன்கிழமை (செப். 18) வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் ஆக்கிரமிப்புகள் ஜேசிபி மூலம் இடித்து அகற்றப்பட்டன. தாழையூத்து போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

Dinamani
www.dinamani.com