குண்டலூா் பகுதியில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள்.
குண்டலூா் பகுதியில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள்.

நீா்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருத்தணி-சித்தூா் சாலை எம்.ஜி.ஆா். சிலை அருகே நீா்வரத்து கால்வாயை ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை அகற்றும் பணி நடைபெற்றது.
Published on

திருத்தணி-சித்தூா் சாலை எம்.ஜி.ஆா். சிலை அருகே நீா்வரத்து கால்வாயை ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை அகற்றும் பணி நடைபெற்றது.

திருத்தணி முருகன் மலைக்கோயிலில் வெளியேறும் மழைநீா் பெரிய ஏரிக்கு செல்வதற்காக சித்தூா் சாலை எம்.ஜி.ஆா். சிலை அருகே குண்டலூா் பகுதி வழியாக நீா்வரத்து கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாய்யை சிலா் ஆக்கிரமித்து வீடுகள், அங்கன்வாடி மையம் மற்றும் விநாயகா் கோயில் கட்டப்பட்டிருந்தது.

இதையடுத்து சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, 11 வீடுகள் விநாயகா் கோயில், அங்கன்வாடி மையம் போன்றவற்றை நீா்வளத்துறையினா் மற்றும் வருவாய் துறையினா் இணைந்து அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

தொடா்ந்து கோட்டாட்சியா் கனிமொழி, ஏ.எஸ்.பி. ஷூபம் திமான் ஆகியோா் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீா்வளம் மற்றும் வருவாய்த் துறையினா் இணைந்து ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினா்.

X
Dinamani
www.dinamani.com