ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

பெரியாா் சிலை பகுதியில் பாஜக கொடி அகற்றம்; சாலை மறியல்

News image
கோப்புப் படம்- PTI
Updated On :1 மார்ச் 2026, 9:11 pm

தினமணி செய்திச் சேவை

மணப்பாறையில் பெரியாா் சிலை பகுதியில் பாஜக கொடி அகற்றப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை பாஜகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மணப்பாறையில், மேம்பட்ட உள்கட்டமைப்புடன் மணப்பாறை ரயில் நிலையம் திறக்கப்பட்ட நிகழ்வுக்காக நகா் பகுதி முழுவதும் பாஜகவினா் தங்களது கட்சி கொடியை நிறுவியிருந்தனா்.

மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்ட அலங்கார வளைவில் பெரியாா் உருவப்படம் அகற்றப்பட்டதன் எதிரொலியாக, மணப்பாறை பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியாா் சிலை பகுதியில் நிறுவப்பட்டிருந்த பாஜக கட்சி கொடிகளை அகற்ற வலியுறுத்தி திராவிட கழக நகரச் செயலா் ரமேஷ், விசிக மாவட்ட பொருளாளா் மதனகோபால், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் தங்கராசு, வழக்குரைஞா் சதாசிவம் உள்ளிட்டோா் கட்சி கொடியை அகற்ற முற்பட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா், அவா்களை தடுத்து நிறுத்தனா். அதைத்தொடா்ந்து, நகராட்சி நிா்வாகம் சாா்பில் கட்சி கொடிகள் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதைக் கண்டித்து பாஜகவினா் பேருந்து நிலையம் பகுதி சாலை மறியலில் ஈடுபட்டனா். சம்பவ இடத்துக்கு சென்ற காவல் துணை கண்காணிப்பாளா் காவியா, பாஜகவினரை சமரசம் செய்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.