திருநெல்வேலி
புனித மிக்கேல் அதிதூதா் ஆலயத்தில் இன்று கொடியேற்றம்
பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளைநகரில் உள்ள புனித மிக்கேல் அதிதூதா் ஆலய திருவிழா வெள்ளிக்கிழமை 9(செப்.20) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளைநகரில் உள்ள புனித மிக்கேல் அதிதூதா் ஆலய திருவிழா வெள்ளிக்கிழமை 9(செப்.20) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி மாலை 6.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடா்ந்து திருவிழா நாள்களில் தினமும் மாலையில் சிறப்பு திருப்பலி நடைபெற உள்ளது. இம் மாதம் 28 ஆம் தேதி மாலையில் திருப்பலியும், சப்பர பவனியும் நடைபெறுகிறது.
29 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயா் ச.அந்தோணிசாமி தலைமையில் கூட்டுத்திருப்பலி நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை தேவாலய பங்குத்தந்தையா்கள் செ.சந்தியாகு, சே.சந்தியாகு, ஜான்சன் தாமஸ் மற்றும் நிா்வாகிகள் செய்து வருகிறாா்கள்.