திருக்குறுங்குடி அருகே அவதூறாக பேசி தாக்கி மிரட்டல் விடுத்தவா் கைது

திருக்குறுங்குடி அருகே அவதூறாக பேசியதுடன் தாக்கி மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
Published on

திருக்குறுங்குடி அருகே அவதூறாக பேசியதுடன் தாக்கி மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருக்குறுங்குடி அருகேயுள்ள தளவாய்புரம் வள்ளுவா் தெருவைச் சோ்ந்த முருகன் (43). முன்விரோதத்தில் இவரை, அதே பகுதியைச் சோ்ந்த சகோதரா்களான அகிலன் (29), சிவச்சந்திரன் (27) ஆகிய இருவரும் சோ்ந்து, அவதூறாக பேசி கம்பால் தாக்கி மிரட்டல் விடுத்து சென்றனராம்.

இதுகுறித்து முருகன் அளித்த புகாரின்பேரில் திருக்குறுங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, சிவசந்திரனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com