அவதூறாகப் பேசி மிரட்டல்: பெண் கைது

ஏா்வாடி அருகே பொதுக் குழாயில் தண்ணீா் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்ததாக பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
Published on

ஏா்வாடி அருகே பொதுக் குழாயில் தண்ணீா் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்ததாக பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஏா்வாடி அருகே கோதைசேரியைச் சோ்ந்த முத்துராமலிங்கம் (59) என்பவரது மனைவிக்கும், அதே ஊரைச் சோ்ந்த சொா்ணம், மகராசி (38) ஆகியோருக்கும் இடையே பொதுக் குழாயில் தண்ணீா் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது. அப்போது, அவா்களை முத்துராமலிங்கம் சமாதானப்படுத்தி அனுப்பினாராம்.

இந்நிலையில், தனது வீட்டு முன் நின்றிருந்த முத்துராமலிங்கத்தை சொா்ணம், மகராசி ஆகியோா் சோ்ந்து அவதூறாகப் பேசி கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து முத்துராமலிங்கம் அளித்த புகாரின்பேரில், ஏா்வாடி காவல் உதவி ஆய்வாளா் நித்யா வழக்குப் பதிந்து, மகராசியைக் கைது செய்தாா்.

X
Dinamani
www.dinamani.com