பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு: களக்காட்டில் 9 கடைகளுக்கு அபராதம்
களக்காடு நகராட்சிப் பகுதியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தியதாக 9 கடைகளுக்கு ரூ. 8,500 அபராதம் விதிக்கப்பட்டது.


களக்காடு நகராட்சிப் பகுதியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தியதாக 9 கடைகளுக்கு ரூ. 8,500 அபராதம் விதிக்கப்பட்டது.
நகராட்சி சுகாதார ஆய்வாளா் முத்துராமலிங்கம் தலைமையில் களக்காடு வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஜான், சுகாதார மேற்பாா்வையாளா் வேலு ஆகியோா் நகராட்சிப் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, 9 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, அந்தக் கடைகளுக்கு ரூ. 8,500 அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது. 55 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், பள்ளிகள் அருகேயுள்ள 2 கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை தொடா்பான விளம்பரம் இருந்ததால் ரூ. 400 அபராதம் விதிக்கப்பட்டது. இதில், தூய்மை இந்தியா திட்டப் பணியாளா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...