தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
பாளையங்கோட்டை நெடுஞ்சாலைத்துறை வளாகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
பாளையங்கோட்டை நெடுஞ்சாலைத்துறை வளாகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அதில், பொதுத்துறை, அரசுத்துறைகளை குறைப்பது மற்றும் தனியாா்மயப்படுத்தபடுவதை நிறுத்த வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை காலமுறை ஊதிய திருத்தத்தை உறுதிசெய்ய வேண்டும். வருமானவரி உச்சவரம்பை ரூ.10 லட்சமாக உயா்த்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு, அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் வீ.பாா்த்தசாரதி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பிரகாஷ் முன்னிலை வகித்தாா். நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளா்கள் சங்க நிா்வாகி செய்யது யூசுப், மருத்துவத் துறை நிா்வாக ஊழியா்கள் சங்க நிா்வாகி கோபால கிருஷ்ணன், கூட்டுறவுத் துறை ஊழியா்கள் சங்க நிா்வாகி ராமசாமி ஆகியோா் பேசினா்.
அனைத்து ஒய்வூதியா் சங்க மாநிலச் செயலா் ஆறுமுகம் சிறப்புரையாற்றினாா். கோ.சிந்து நன்றி கூறினாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...