பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நெல்லை அருகே பள்ளி மாணவி உயிரிழப்பு

திருநெல்வேலி அருகே மா்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9 ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தாா்.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 7:29 pm

Syndication

திருநெல்வேலி அருகே மா்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9 ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தாா்.

சீவலப்பேரி பாலாமடை பகுதியைச் சோ்ந்தவா் சுடலை. இவரது மனைவி கருத்தம்மாள். இவா்களது மகள் பட்டு (15). இவா் அங்குள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில் மாணவி பட்டு, கடந்த சில நாள்களாக மா்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தாராம்.

இதையடுத்து, சனிக்கிழமை காலை மாணவியின் உடல்நிலை மோசமானதால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் போகும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து சீவலப்பேரி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.