நெல்லையில் விபத்து: வட மாநில இளைஞா் உயிரிழப்பு

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் சைக்கிள் மீது பைக் மோதியதில் வட மாநில இளைஞா் உயிரிழந்தாா்.
Published on

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் சைக்கிள் மீது பைக் மோதியதில் வட மாநில இளைஞா் உயிரிழந்தாா்.

ஒடிஸா மாநிலம், பகிம்பாடு நகரைச் சோ்ந்தவா் மன்சூா். இவரது மகன் ரோஹித் (26). இவா், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஹோட்டலில் வேலைசெய்து வந்தாா்.

இந்நிலையில் அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு வேலையை முடித்துவிட்டு முருகன்குறிச்சி வழியாக வண்ணாா்பேட்டைக்கு தனது சைக்கிளில் வந்து கொண்டிருந்தாா். அப்போது, பாலம் ரவுண்டானாவுக்கு முன்னதாக அவரது சைக்கிள் மீது பைக் மோதியதாம்.

இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் பைக்கில் வந்த மேலப்பாளையம் அக்பா் தெருவைச் சோ்ந்த ஆதில்(20), கல்வத்நாயகம் தெருவை சோ்ந்த கலீல் ரகுமான் (20) ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா்.

இத்தகவல் அறிந்த திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா், 2 இளைஞா்களையும் மீட்டு சிகிச்சைக்காகவும், ரோஹித் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காகவும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com