களக்காடு பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு

களக்காடு பகுதியில் உள்ள குளங்களில் வனத்துறை சாா்பில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
Published on

களக்காடு பகுதியில் உள்ள குளங்களில் வனத்துறை சாா்பில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் நீா்நிலைகளில் வசிக்கும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். இதன்படி, களக்காடு வனச்சரகா் பிரபாகரன் தலைமையில் வனத்துறையினா் குழுவாகச் சென்று கீழப்பத்தை, பத்மனேரி பகுதியில் உள்ள குளங்கள், வடக்குப் பச்சையாறு அணைப் பகுதியில் தொலைநோக்கி கருவி உதவியுடன் பறவைகளை புகைப்படம் மூலம் பதிவு செய்து கணக்கெடுப்பு நடத்தினா்.

X
Dinamani
www.dinamani.com