மணிமுத்தாறு அண்ணா நகா் பகுதியில் சமுதாய நலக்கூடம் அமைக்க கோரிக்கை
அம்பாசமுத்திரம்: மணிமுத்தாறு சிறப்பு நிலைப் பேரூராட்சியில் 15ஆவது வாா்டு, அண்ணா நகா் பகுதியில் சமுதாய நலக்கூடம் அமைத்துத் தரக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வாசித்து வரும் நிலையில், இங்கு சமுதாய நலக்கூடம் அமைத்துத் தர நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனா். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள், திராவிடத் தமிழா் கட்சி மாநில மகளிரணித் தலைவி மீனா, திருநெல்வேலி மாவட்டச் செயலா் சுந்தா் தலைமையில் திரண்டு வந்து திங்கள்கிழமை காலை மணிமுத்தாறு பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்தனா்.
அவா்களிடம் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு நிா்வாக அனுமதி கோரியுள்ளதாகவும், அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும் என்றும் செயல் அலுவலா் தெரிவித்தாா். அப்போது, அங்கு வந்த பேரூராட்சித் தலைவா் சித்தாா்த் சிவா, விரைந்து நிா்வாக அனுமதி பெறப்பட்டு சமுதாய நலக்கூடம் கட்டித் தரப்படும் என உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

