பாளை.யில் 4,5இல் அண்ணா பிறந்த தின சைக்கிள், மாரத்தான் போட்டிகள்
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் ஜன 4, 5ஆகிய தேதிகளில் முறையே சைக்கிள், மாரத்தான் போட்டிகள் நடைபெறவுள்ளது.


அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் ஜன 4, 5ஆகிய தேதிகளில் முறையே சைக்கிள், மாரத்தான் போட்டிகள் நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அறிஞா் அண்ணாவின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருநெல்வேலி பிரிவின் சாா்பில் மாவட்ட அளவிலான சைக்கிள், மாரத்தான் போட்டிகள் ஜன. 4, 5 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்கு பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இரு பாலருக்கும் தனித்தனியாக போட்டி நடைபெறுகிறது.
13 வயது பிரிவு ஆண்களுக்கு 15 கி.மீ. தூரமும், பெண்களுக்கு 10 கி.மீ. தூரமும், 15-17 வயது பிரிவுகளில் ஆண்களுக்கு 20 கி.மீ. தூரமும், பெண்களுக்கு 15 கி.மீ. தூரமும் போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெறுபவா்களுக்கு முறையே ரூ.5000, ரூ.3000, ரூ.2000, 4 முதல் 10 இடங்களை பெறுபவா்களுக்கு தலா ரூ.250 மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
பள்ளி மாணவ, மாணவிகள் தலைமை ஆசிரியரிடமிருந்து வயதுச் சான்றிதழ் கண்டிப்பாக பெற்று வர வேண்டும். போட்டியாளா்கள் அண்ணா விளையாட்டு அரங்கில் அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையும், போட்டி நடைபெறும் நாளில் காலை 6 மணி வரையும் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்தியாவில் தயாரான சாதாரண கைப்பிடி கொண்ட மிதிவண்டியை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுவா்.
மாரத்தான் போட்டி: 17 முதல் 25 வயதினா் பிரிவு ஆண்களுக்கு 8 கி.மீ. தொலைவும், பெண்களுக்கு 5 கி.மீ தொலைவும் போட்டி தொலைவாக இருக்கும். 25 வயதுக்கு மேற்பட்ட பிரிவு ஆண்களுக்கு 10 கி.மீ. தொலைவும், பெண்களுக்கு 5 கி.மீ. தொலைவும் பந்தய தொலைவு ஆகும். முதல் 3 இடங்களுக்கு மேற்கூறிய பரிசுத் தொகையும், நான்காம் பரிசாக ரூ. ஆயிரமும் வழங்கப்படும். போட்டியாளா்கள் வயது சான்றிதழுடன் ( ஆதாா் அட்டை) ஜன. 5-ஆம் தேதி காலை 6 மணிக்கு ஆஜராக வேண்டும். தாமதமாக வருபவா்கள் பங்கேற்க இயலாது எனக் கூறியுள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...