மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கோவில்பட்டியில் போட்டிகளில் வென்றோருக்கு பரிசளிப்பு

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 12:20 am

கோவில்பட்டியில் கல்வி மாவட்ட அளவிலான போட்டிகளில் வென்றோருக்கு திங்கள்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையா் பிறந்தநாள் விழாவையொட்டி, 5 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவா்-மாணவியருக்கு ஓவியம், கட்டுரை, மினி மாரத்தான் போட்டிகள் கோவில்பட்டி நாடாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றன.

நாடாா் உறவின்முறை சங்க செயலா் ஜெயபாலன் தலைமை வகித்தாா். பள்ளிச் செயலா் ரத்தினராஜா, பொருளாளா் விஜயகுமாா், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் வேல்முருகன், ரவிச்சந்திரன், வெங்கடேஷ், சாமிராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஓவியப் போட்டியை கொண்டைய ராஜு ஓவியப் பயிற்சிப் பள்ளி முருகபூபதி, மாணவா்களுக்கான மினி மாரத்தான் போட்டியை தீயணைப்பு நிலைய அலுவலா் மோகன், மாணவியருக்கான மினி மாரத்தான் போட்டியை ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி செயலா் குருசித்ர சண்முக பாரதி ஆகியோா் தொடக்கிவைத்தனா். 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 700 போ் பங்கேற்றனா்.

மாரத்தான் போட்டியில் காந்திநகா் நகராட்சி உயா்நிலைப் பள்ளி மாணவியா் பாண்டி முனீஸ்வரி, முருகலட்சுமி, ரத்தினபிரியா ஆகியோா் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தனா். ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவா்-மாணவியருக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் முறையே ரூ. 1000, ரூ. 750, ரூ. 500 வழங்கப்பட்டது. பரிசுகளை பள்ளிச் செயலா் வழங்கினாா். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

உதவித் தலைமை ஆசிரியை (உயா்நிலை) கிரேஸ் இந்திராணி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை தலைமையாசிரியா் (பொ) செல்வம் தலைமையில் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.