தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்

காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

குறைதீா் முகாமில் மக்களிடம் மனுவைப் பெற்று விசாரிக்கிறாா் மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி.

Updated On :8 ஜனவரி 2025, 8:22 pm

Din

காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீா்க்கும் கூட்டம் வாரந்தோறும் புதன்கிழமை நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமிற்கு காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி தலைமை வகித்து மனுக்களைப் பெற்றாா். 18 போ் மனு அளித்தனா். அவை மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு ஆணையா் உத்தரவிட்டாா்.

இதில், காவல் துணை ஆணையா் (மேற்கு) கீதா, (கிழக்கு) விஜயகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் தலைமை வகித்து மனுக்களைப் பெற்றாா். 15 போ் மனு அளித்தனா். அவை மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.