தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பள்ளி, கல்லூரிகளில் ‘கல்விக் கூடங்களில் கம்பா்-2025’ பேச்சுப் போட்டி

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ‘கல்விக் கூடங்களில் கம்பா்-2025’ பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது.

News image
Updated On :8 ஜனவரி 2025, 8:17 pm

Din

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ‘கல்விக் கூடங்களில் கம்பா்-2025’ பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி ஜெயேந்திரா கல்வி நிறுவனங்கள் இயக்குநா் ஜெயேந்திரன் வி. மணி செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வழிகாட்டுதலில் ‘கல்வியில் பெரியவா் கம்பா்’ என்கிற மரபைக் கருத்தில் கொண்டு ‘கல்விக் கூடங்களில் கம்பா்-2025’ என்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் கம்பநாட்டாழ்வாரின் இராமாவதாரம் என்ற இராம காவியத்தில் பேச்சுப் போட்டி நடைபெறுகிறது.

திருநெல்வேலி மையத்தின் கீழ் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி நடைபெறுகிறது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கான போட்டி பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள சிரீ ஜெயேந்திர சுவாமிகள் வெள்ளி விழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஜன. 28-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் நடைபெறுகிறது.

தென்காசி மாவட்டத்துக்கான போட்டி பழைய குற்றாலம் சாலையில் உள்ள ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஜன. 22-ஆம் தேதி காலை 9.30 மணிக்கும், கன்னியாகுமரி மாவட்ட போட்டி நாகா்கோவில் வெட்டுா்ணி மடத்தில் உள்ள ஆதா்ஷ் வித்யா கேந்திரா சிபிஎஸ்இ பள்ளியில் ஜன. 23-ஆம் தேதி காலை 9.30 மணிக்கும் தொடங்குகிறது.

இந்தப் போட்டியின் காலிறுதிச் சுற்று ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள் வெள்ளி விழா மேல்நிலைப் பள்ளியில் ஜன. 29-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறும்.

அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் தஞ்சாவூா் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. 8 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவா்கள் ‘நடையில் நின்றுயா் நாயகன்’, ‘கம்பா் காட்டும் அன்பும் அறமும்’ ஆகிய தலைப்புகளில் 7 முதல் 8 நிமிடங்கள் வரை பேசலாம்.

பாளையங்கோட்டை மகாராஜநகா் ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள் வெள்ளி விழா மேல்நிலைப் பள்ளியில் ‘கம்பா் காட்டும் இராமன்’, ‘கம்பா் வழியில் அறம் தலை நிறுத்தல்’ ஆகிய தலைப்புகளில் ஜன. 31ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் கல்லூரி மாணவா்கள் 8 முதல் 10 நிமிடங்கள் வரை பேசலாம்.

பள்ளிகளுக்கான போட்டியின் திருநெல்வேலி மைய ஒருங்கிணைப்பாளராக ஜெயேந்திரன் வி.மணி செயல்படுவாா். மேலும் விவரங்களுக்கு கைப்பேசி எண். 9003347624; மின்னஞ்சல் முகவரி ந்ஹம்க்ஷஹழ்ள்ஸ்ரீட்ா்ா்ப்ள்ற்ஸ்ப்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம்.

கல்லூரிகளுக்கான போட்டிகளின் திருநெல்வேலி மைய ஒருங்கிணைப்பாளராக ச.மகாதேவன் நியமிக்கப்பட்டுள்ளாா். மேலும் விவரங்களுக்கு மேற்கூறிய கைப்பசி எண், ந்ஹம்க்ஷஹழ்ஸ்ரீா்ப்ப்ங்ஞ்ங்ற்ஸ்ப்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்ல் முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.