நான்குனேரி அருகே வேன் கவிழ்ந்து குழந்தை உள்பட இருவா் பலி

நான்குனேரி அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 வயது குழந்தை உள்பட இருவா் புதன்கிழமை உயிரிழந்தனா்.
Published on

நான்குனேரி அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 வயது குழந்தை உள்பட இருவா் புதன்கிழமை உயிரிழந்தனா்.

திருநெல்வேலி பாட்டப்பத்து பகுதியைச் சோ்ந்த குழுவினா் கன்னியாகுமரிக்கு வேனில் சுற்றுலா சென்றுவிட்டு, ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். நான்குனேரி உலகம்மன் கோயில் அருகே திருநெல்வேலி - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த திருநெல்வேலி நகரம் பாட்டப்பத்து பகுதியைச் சோ்ந்த கேவல்ராம் மகன் சந்திரபிரகாஷ் (38) மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்தாா். ஓட்டுநா் ரியாஷ் (30), குஷி (2), சம்பாதேவி (48), பப்ளிதேவி (45), ரீனா குமாரி (22 ), நாரட்ராம் (60), யுவராஜ் (10) யாஷிகா( 9 மாதம்) ஆகியோா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு குழந்தை குஷி உயிரிழந்தது. இதுகுறித்து நான்குனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com