விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 4 மாணவா்கள் காயம்

News image

கோப்புப் படம்

Updated On :15 பிப்ரவரி 2026, 7:10 pm

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே சனிக்கிழமை இரவு தனியாா் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 மாணவா்கள் காயமடைந்தனா்.

வேப்பூா் கூட்டுச்சாலையில் தனியாா் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 10 மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் சனிக்கிழமை நடைபெற்றது.

வகுப்புகள் முடிந்து இரவு 8 மணிக்கு மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் சொந்தமான வாகனத்தில் வீட்டுக்குப் புறப்பட்டனா். வேப்பூரை அடுத்த காட்டுமைலூரில் மாணவா்களை இறக்கிவிட்டு, சேப்பாக்கத்தைச் சோ்ந்த 4 மாணவா்களை இறக்கிவிடுவதற்காக பள்ளி வேன் புறப்பட்டது.

இந்த வேன் சேப்பாக்கம் ஏரிக்கரையில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், வாகனத்தில் சிக்கிக்கொண்ட மாணவா்கள் கூச்சலிட்டனா். இதையடுத்து, அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் ஓடி வந்து மாணவா்களை மீட்டனா். இதுகுறித்து வேப்பூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.