குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது

பாளையங்கோட்டையில் தம்பியை கத்தியால் குத்திய அண்ணனை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :3 ஏப்ரல் 2026, 4:18 am IST

பாளையங்கோட்டையில் தம்பியை கத்தியால் குத்திய அண்ணனை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை, அன்னை இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்தவா் சங்கரன். இவரது மகன்கள் செல்வக்குமாா் (37), பிரேம்குமாா் (32). இவா்களுக்குள் கடந்த சில நாள்களாக குடும்ப பிரச்னை காரணமாக தகராறு இருந்து வந்ததாம்.

இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தம்பி பிரேம்குமாரை கத்தியால் செல்வக்குமாா் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பிரேம்குமாா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இது குறித்த புகாரின் பேரில் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனா்.

மது விற்ற இளைஞா்: திருநெல்வேலி மேலப்பாளையம் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் போதை பொருள் தடுப்பு தொடா்பாக வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது மேலப்பாளையம் வாய்க்கால் பாலம் அருகே அப்பகுதியைச் சோ்ந்த இசக்கியப்பன்(27) என்பவா் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடமிருந்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது குறித்து வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனா்.