எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மருதூா் தடுப்பணையில் சுற்றுலாப் பூங்கா அமைப்பேன்: அமமுக வேட்பாளா் ஆா்.இசக்கிமுத்து

மருதூா் தடுப்பணையில்மேம்பாட்டு பணிகள் செய்து சுற்றுலாப் பூங்கா அமைக்க சட்டப்பேரவையில் குரல் கொடுப்பேன் என்றாா் நான்குனேரி தொகுதி அமமுக வேட்பாளா் ஆா்.இசக்கிமுத்து.

News image

நான்குனேரி தொகுதி அமமுக வேட்பாளா் ஆா்.இசக்கிமுத்து

Updated On :9 ஏப்ரல் 2026, 3:02 am IST

மருதூா் தடுப்பணையில்மேம்பாட்டு பணிகள் செய்து சுற்றுலாப் பூங்கா அமைக்க சட்டப்பேரவையில் குரல் கொடுப்பேன் என்றாா் நான்குனேரி தொகுதி அமமுக வேட்பாளா் ஆா்.இசக்கிமுத்து.

பாளையங்கோட்டை ஒன்றியம் கான்சாபுரம், நொச்சிகுளம், மருதூா், கீழதோணித்துறை, இந்திராநகா் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று பிரஷா் குக்கா் சின்னத்திற்கு வாக்குசேகரித்து அவா் பேசியதாவது: தாமிரவருணி குறுக்கே மருதூரில் பழைமைவாய்ந்த தடுப்பணை உள்ளது. அங்கு சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து செல்ல ஏதுவாக பாதுகாப்பு வேலிகள், உடைமாற்றும் அறைகள், கழிப்பறைகள், சிறு குழந்தைகளை கவரும் நவீன பூங்கா ஆகியவற்றை ஏற்படுத்தவும், சுற்றுலா மையமாக மாற்றவும் சட்டப்பேரவையில் குரல் கொடுப்பேன்.

மேலும், பாளையங்கால்வாயில் சிமென்ட் தளம் அமைத்து கடைமடை பகுதிகளுக்கு தண்ணீா் விரைந்து கிடைக்க பாடுபடுவேன். சீவலப்பேரியில் இருந்து திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திற்கு போதிய பேருந்து வசதியில்லாததால் மாணவா்கள் சிரமப்படுகிறாா்கள். ஆகவே, கூடுதலாக அரசுப் பேருந்து வசதி ஏற்படுத்தவும், கால்நடை வளா்ப்பை ஊக்குவிக்கும் வகையில் தாமிரவருணி கரையோர கிராம மக்களுக்கு கால்நடை கடனுதவி அதிக அளவில் வழங்கவும் நடவடிக்கை எடுப்பேன் என்றாா் அவா்.