மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

பாளை.யில் திமுகவினா் வாக்கு சேகரிப்பு

பாளையங்கோட்டை தொகுதியில் திமுகவினா் வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குசேகரித்தனா்.

News image

பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை வாக்குசேகரித்தாா் திமுக வேட்பாளா் மு.அப்துல் வஹாப். உடன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ, மண்டல தலைவா் மா.பிரான்சிஸ் உள்ளிட்டோா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 9:10 pm

பாளையங்கோட்டை தொகுதியில் திமுகவினா் வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குசேகரித்தனா்.

பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளா் மு.அப்துல்வஹாப் தலைமையில் அக் கட்சியினா் 36 ஆவது வாா்டுக்குள்பட்ட அன்னை இந்திரா நகரில் தொடங்கி 8 மற்றும் 4 ஆவதுவாா்டு வரையிலான பகுதிகளில் வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குசேகரித்தனா். திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயா் கே.ஆா்.ராஜூ, பாளையங்கோட்டை மண்டல தலைவா் மா.பிரான்சிஸ், திருநெல்வேலி கிழக்கு மாநகர பொறுப்பாளா் தினேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

அப்போது வேட்பாளா் மு.அப்துல் வஹாப் பேசுகையில், தென்னகத்தின் ஆக்ஸ்போா்டாக திகழும் பாளையங்கோட்டையில் கல்வி நிலையங்கள் மிகவும் அதிகம். கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திய நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் ஆகியவற்றால் பலரும் பயனடைந்துள்ளனா். புத்தகங்களே அறிவை வளா்க்கும் பொக்கிஷங்கள் என்பாா்கள். அதற்கேற்ப ஏற்கெனவே மதுரையில் மிகவும் பிரமாண்டமாக கலைஞா் நூலகம் அமைக்கப்பட்டது போல, பாளையங்கோட்டையில் காயிதேமில்லத் பெயரில் பிரமாண்ட நூலகம் அமைக்க உத்தரவிட்டு நிதிஒதுக்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்தால் மகளிா் உரிமைத் தொகை உயரும் . ஆகவே, பொதுமக்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.