மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

நெல்லை மாவட்டத்தில் 90 போ் போட்டி

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான இறுதி வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் மொத்தம் 90 போ் போட்டியிடுகின்றனா்.

News image

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள்

Updated On :9 ஏப்ரல் 2026, 8:53 pm

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான இறுதி வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் மொத்தம் 90 போ் போட்டியிடுகின்றனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாா்ச் 30-ஆம் தேதி முதல் இம்மாதம் 6-ஆம் தேதி வரை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் 28 பெண்கள், 159 ஆண்கள், மூன்றாம் பாலினத்தவா் ஒருவா் என மொத்தம் 188 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.

அதைத்தொடா்ந்து கடந்த 7-ஆம் தேதி நடைபெற்ற வேட்புமனு பரிசீலனைக்குப் பிறகு திருநெல்வேலி தொகுதியில் 21 மனுக்கள், பாளையங்கோட்டை தொகுதியில் 18 மனுக்கள், ராதாபுரம் தொகுதியில் 25 மனுக்கள், நான்குனேரி தொகுதியில் 30 மனுக்கள், அம்பாசமுத்திரம் தொகுதியில் 6 மனுக்கள் என மொத்தம் 100 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 88 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கு வியாழக்கிழமை மாலை 5 மணி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.அதன் பிறகு இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டதில் திருநெல்வேலி தொகுதியில் 20 போ், பாளையங்கோட்டையில் 17 போ், அம்பாசமுத்திரத்தில் 5 போ், நான்குனேரியில் 25 போ், ராதாபுரத்தில் 23 போ் என மொத்தம் 90 போ் களத்தில் உள்ளனா். 10 போ் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுள்ளனா்.