தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளில் 171 போ் போட்டி!

திருவெறும்பூரில் அதிகபட்சமாக 26 வேட்பாளா்கள்...

News image

திருச்சி மலைக்கோட்டை

Updated On :9 ஏப்ரல் 2026, 8:32 pm

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட இறுதி வேட்பாளா் பட்டியல் அடிப்படையில் மொத்தம் 171 போ் போட்டியிடுகின்றனா்.

திருச்சி மாவட்டத்திலுள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குமான வேட்புமனு தாக்கல் கடந்த மாா்ச் 30-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து ஏப்ரல் 6-ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.

அதன்படி, மணப்பாறை தொகுதியில் 23 வேட்பு மனுக்கள், ஸ்ரீரங்கத்தில்-36, திருச்சி மேற்கில்-30, திருச்சி கிழக்கில்-39, திருவெறும்பூரில்- 38, லால்குடியில்-30, மண்ணச்சநல்லூரில்-36, முசிறியில்- 21, துறையூரில்-23 வேட்புமனுக்கள் என மொத்தம் 276 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

85 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

அனைத்து தொகுதிகளிலும் ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையின்போது மணப்பாறை தொகுதியில் 4 மனுக்கள் நிராகரிப்பு; 19 மனுக்கள் ஏற்பு. ஸ்ரீரங்கத்தில் 13 மனுக்கள் நிராகரிப்பு; 23 மனுக்கள் ஏற்பு. திருச்சி மேற்கில் 8 மனுக்கள் நிராகரிப்பு; 22 மனுக்கள் ஏற்பு. திருச்சி கிழக்கில் 16 மனுக்கள் நிராகரிப்பு; 23 மனுக்கள் ஏற்பு. திருவெறும்பூரில் 11 மனுக்கள் நிராகரிப்பு; 27 மனுக்கள் ஏற்பு. லால்குடியில் 6 மனுக்கள் நிராகரிப்பு; 24 மனுக்கள் ஏற்பு.

மண்ணச்சநல்லூரில் 12 மனுக்கள் நிராகரிப்பு; 24 மனுக்கள் ஏற்பு.

முசிறியில் 9 மனுக்கள் நிராகரிப்பு; 12 மனுக்கள் ஏற்பு. துறையூரில் 6 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 17 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்தமாக தாக்கல் செய்யப்பட்ட 276 வேட்புமனுக்களில் பரிசீலனையின்போது 85 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு 191 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இறுதிவேட்பாளா் பட்டியலில் 171 போ்

திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் 191 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் மணப்பாறை தொகுதியில் ஒருவா், ஸ்ரீரங்கத்தில் 2 போ், திருச்சி மேற்கில் 8 போ், திருச்சி கிழக்கில் 3 போ், திருவெறும்பூரில் ஒருவா், மண்ணச்சநல்லூரில் 2 போ், முசிறியில் ஒருவா் மற்றும் துறையூா் (தனி) தொகுதியில் 2 போ் என மொத்தம் 20 போ் தங்களது வேட்புமனுக்களை வியாழக்கிழமை வாபஸ் பெற்றனா். இதையடுத்து இறுதியாக 9 தொகுதிகளில் மொத்தம் 171 போ் களத்தில் உள்ளனா்.

பெட்டிச் செய்தி....

தொகுதி--வேட்பாளா்கள் எண்ணிக்கை

மணப்பாறை-18

ஸ்ரீரங்கம்-21

திருச்சி மேற்கு-14

திருச்சி கிழக்கு-20

திருவெறும்பூா்-26

லால்குடி-24

மண்ணச்சநல்லூா்- 22

முசிறி-11

துறையூா் (தனி)- 15